எனது இதயமென்னும்
இன்பாக்ஸில்தான்...
இவனது இருப்பிடம்
ஏதோ ஒரு நோக்கியா செல்லில்தான் பிறப்பிடம்
எனக்குள் அவனின்
காதலில் சுழற்பம்பரமாய்.....!!!
அதிகமா- நான்
அழைப்பது அவனது அப்பாவைத்தான்
தொடுப்பது அவனைத்தான்
நினைப்பது எல்லாம் அவன் வசம்தான்...!!!
எனது
முதல் செல்லில்
முத்தங்களைத்தான்
இட்டேன்...
அவனது பெயரிடப்பட்ட்தால்....!!!
ஆனால்
எனக்கென்று
ஒன்றுமில்லாத அவனது
சிம் கார்டானது எனது இதயம்
அடிக்கடி அவன பார்க்காததால
நாட் ரீச்சஃபுல் ஆகுது...!!!
இதயம்
பதறுவது எப்போதுனா
நான் அழைக்கின்ற போது
நான் முத்தமிட்ட செல்லில் யாரோ!
பேசுவதை எனது செல்
எனக்குண்ர்த்தும்போதுதான்...!!!
காதலை நான்
செல்லின் வழியாகதான்
அவனது இதயத்தை சுமக்கிறேன்...!!!
எங்கோ பிறந்த நம்மை
எங்கோ பிறந்த இந்த குட்டியோனு செல்
நம்மை இணைக்கும்போதெல்லாம்
இதயத்திற்கு ஒரு இதமாகத்தானிருக்கிறது....!!!
தினமும் வரும் எஸ்.எம்.எஸ்.களில்
அடிக்கடி வெருப்படைவது
நானாகத்தான் இருப்பேன்
உன் எஸ்.எம்.எஸ் வராத போது....!!!
சாலையோரம் பேசிட்டு
செல்லும் போது-எனது
சுடியை கவ்வப்பார்த்த நாய்கூட
உன்னப் பத்தி
பேசிட்டு போனாதான்
ஒதுங்கியே போகுது பாறேன்.....!!!
என் இதயம் சூடாகுவது
இதழில் தெரியவில்லை
செல் போனில் தெரிகிறது
அதுமட்டுமின்றி...
வயிற்று எரிச்சல பாறேன்
செல்போனுக்கு-
உன்னுடன் அதிக நேரம் பேசுவதால்...!!!
எனக்கு உன்னிடம் இருந்து
ரிசிவ்டுகால்தான்
பார்க்குறேன்...
மிஸ்டுகால் நான்
அறவே தவிர்க்குறேன்....!!!
No comments:
Post a Comment