Tuesday, August 18, 2009

செல்-காதலன்

எனது இதயமென்னும்
இன்பாக்ஸில்தான்...
இவனது இருப்பிடம்
ஏதோ ஒரு நோக்கியா செல்லில்தான் பிறப்பிடம்
எனக்குள் அவனின்
காதலில் சுழற்பம்பரமாய்.....!!!


அதிகமா- நான்
அழைப்பது அவனது அப்பாவைத்தான்
தொடுப்பது அவனைத்தான்
நினைப்பது எல்லாம் அவன் வசம்தான்...!!!

எனது
முதல் செல்லில்
முத்தங்களைத்தான்
இட்டேன்...
அவனது பெயரிடப்பட்ட்தால்....!!!
ஆனால்
எனக்கென்று
ஒன்றுமில்லாத அவனது
சிம் கார்டானது எனது இதயம்
அடிக்கடி அவன பார்க்காததால
நாட் ரீச்சஃபுல் ஆகுது...!!!
இதயம்
பதறுவது எப்போதுனா
நான் அழைக்கின்ற போது
நான் முத்தமிட்ட செல்லில் யாரோ!
பேசுவதை எனது செல்
எனக்குண்ர்த்தும்போதுதான்...!!!

காதலை நான்
செல்லின் வழியாகதான்
அவனது இதயத்தை சுமக்கிறேன்...!!!
எங்கோ பிறந்த நம்மை
எங்கோ பிறந்த இந்த குட்டியோனு செல்
நம்மை இணைக்கும்போதெல்லாம்
இதயத்திற்கு ஒரு இதமாகத்தானிருக்கிறது....!!!


தினமும் வரும் எஸ்.எம்.எஸ்.களில்
அடிக்கடி வெருப்படைவது
நானாகத்தான் இருப்பேன்
உன் எஸ்.எம்.எஸ் வராத போது....!!!

சாலையோரம் பேசிட்டு
செல்லும் போது-எனது
சுடியை கவ்வப்பார்த்த நாய்கூட
உன்னப் பத்தி
பேசிட்டு போனாதான்
ஒதுங்கியே போகுது பாறேன்.....!!!

என் இதயம் சூடாகுவது
இதழில் தெரியவில்லை
செல் போனில் தெரிகிறது
அதுமட்டுமின்றி...
வயிற்று எரிச்சல பாறேன்
செல்போனுக்கு-
உன்னுடன் அதிக நேரம் பேசுவதால்...!!!


எனக்கு உன்னிடம் இருந்து
ரிசிவ்டுகால்தான்
பார்க்குறேன்...
மிஸ்டுகால் நான்
அறவே தவிர்க்குறேன்....!!!

கனவுக்காதலன்...

இருட்டு உலகில்
நடந்து செல்லும்
எறும்பாய்....


நான் முகிலின் நகர்தலில்
எத்தனிப்பில் லகித்து
மொட்டை மாடிக்கொட்டகைக்குள்
போர்த்துக்கொண்டு
கதைபோடும்-
செவக்க செவக்க
வெத்தலைக்கார பாட்டியின்
பேச்சில் தூங்கியது தெரியாம
நடுராத்திரியில் –உசிப்பினாள்
எனது போர்வையை இழுத்து முத்தமிட்டான்
மழையாய்.....


எனது கனவை
கெடுத்த காதலன்....


அன்றைய இரவு
வெள்ளிகளும்
நிலாக்களையும்
எங்கும் காணோம்
கருத்த இரவில்
வருகை தரும் போது
வானிலிருந்து ஒரு
வெள்ளை வேஷ்டியில்
தொங்கி கொண்டு வருவதாய்
தெரிந்தது....

என் அகமும் ஆசையும் நனைந்து....

Tuesday, August 11, 2009

பேருந்துக்காதலன்…

பேச்சிப்பாறை பவளப்பாறை
வழியாக போகும் போது
உன் எச்சில் நீரை
கமலத்து உயிரை
பார்க்கும்போது
என் கண்கள் பாசுரம் பாடியது....!!!

என்னருகில் வந்து
புத்தகத்தை கொடுத்தாய்
பொன்னமுதில் சிந்தும்
உனது புத்தகத்தை திறந்தேன்
மயக்கத்தை எடுத்தேன்....

என் புகைப்படம் போலவே!
தாஜ்மஹால் முன் நிற்கின்ற
மாதிரி ஒரு புகைப்படம் கண்டு…

ஒருநாள் என் தாவணி நுனியை
எவனோ ஒருவன் மிதித்தான் என்று
உதித்தாய் பாரு
மிதிக்காதே சேரு,.... என்று!

என்னுடன் வந்த தோழி
உன்ன பத்திதான் பேசுறா
அதிகமுறை....

என்னிடம் சில வாரங்களாக
பேசுவதில்லை
நீ உன் காதலை
என்னிடம் சொல்லியதாய்
சொன்ன பிறகு.....
திருவின் உருவத்தை காதலித்தால்
புருவின் குருவை காதலித்தள் என்று
கர்வப்பட்டாள்
காணாங்கொறத்தி மக
கருந்தோடு அணிந்த கருவாட்டுக்கூடைகாரி....
தராசில் தொங்கும்
இருபக்க தட்டாய் தாண்டா
அல்லல் படுது –நீ என் பக்கத்து
இருக்கை அமராவிட்டால்....!!!

ஒருசாய்ச்சு பார்க்கும்
ஒரு பார்வையிலே!
ஓடிக்கொண்டிருக்கும் தென்னை மரங்களெல்லாம்
புன்னை மரமாய் பூத்து குலுங்குவதை பாரேன்....

நுன் நாடி நுரைபொங்க
முன்னே ஒரு தாய் கிழவி கூச்சலிட்டு
குடும்பத்துல குட்டிகலவரம்
பண்ணிவிட்டாள்..போல

ஓட்டுனர் அடித்தான் பாரு
பிரேக்
எனக்கு உன் மேல விழுந்தது
இன்று கிடைச்ச பீர்கேக்....

உனக்கு ஒரு டிக்கெட் வாங்க
என் ஜாக்கெட்டை தடவிய போது
உன் பாக்கெட்டில் ஒலித்தது
திக்கெட்டும் என் பெயரையடா!

நான் பிரிந்து விடுவோமோ!
என படியில இருங்கும் போது
அதிக முறை
நினைப்பதுண்டு....!!!

பலமுறை அம்மாவிடம்
திட்டுவாங்கியதுண்டு
டிக்கெட் எடுக்காதடா
டிக்கெட் எடுக்காதடா என
உன்னை கனவுகளில் அழைத்த போது...!!!

என் வீட்டு படிக்கட்டுகளெல்லாம்
உன் மடுக்கட்டுக்களாய் எண்ணி
தலைவைத்து தூங்கிய காலங்களில்
அப்பாவின் ஏச்சுக்கு ஆளானதுண்டு...

முதன்முதல் ஆளானது
பேருந்தில் உன் பக்கத்திலிருந்துதான்
உன் க்க்கத்தில் என் ஞாபகப்பூவைத்தான்
பூப்பெய்திவிட்டேன்....

பேருந்தில் வரும்
வாசகங்களை குறை
கூறுவதுண்டு
உதடுகள் என்பதற்கு பதிலாக
நம் பெயரை கூறி இருக்கலாமேன.....!!!

பேருந்திலே!
என் வாசக்கூந்தலில்
நீ கூறும் வாழ்த்துச்செய்திக்காகதாண்டா
தினமும்
பூக்காரனிடம் சண்டையிடுவது நான்...

என் தோழி என்னை
ஓடும் பேருந்தில் ஏறாதே!
என்பதற்கு பதில்
ஓடும் உள்ளத்தில் ஊறாதே!
என்று கூச்சலிடுவார்கள்....!!!டா
உனது உள்ளத்தில்
நீந்த கற்றுத்தருவாயா என்னடா!
தருவாய் என்ற நம்பிக்கையில்
படியிறங்கும் உன் காதலி.....!!!

அலுவலக காதலன்

எத்துனையோ!
அலுவலகக்கதவுகள்
திறந்த வண்ணமே
உள்ளது-உன் வருகையை
நோக்கிடா.....!!!

நீ வரும் போது பனித்துளியான
உன் கோப மலர்களை-
என் கொண்டையில்
சிரித்து மலர்கிறது அனுதினமும் எனக்குள்....!!!

காங்கேயம் மாட்டு
கொம்பாய்- உன்
அதட்டல் சத்தம் கேட்டு
பயந்து
நடுங்கி இருக்கேண்டா...!!!

நான் முதலில் வந்து விடுவேன்.
நீ-அன்னத்துக்குப்பின்
வருவதுபோல
நீ வருவாய்....!!!
அலுவலகத்தில்
வேலையைவிட்டு
உன்னைபார்ப்பதுஎன் கரு விழி வட்டு
உன் முகங்களாய்
அழகுபடுத்தும் பொட்டு..

நீ அணியும் ஆடையாக
எண்ணி அணிவேன்
நீ அணிந்து வரமாட்டாய்
நான் நினைக்காத நாளில் அணிந்து வந்து
மகிழ்சியை கொடுப்பாய்.....!!!

மேனேஜர் என் நடத்தை
புகழ்ந்த நாட்களெல்லாம்
உன் நடத்தையை பழக
காரணமென அறிந்துகொண்டேன்....!!!

கையில் கட்டிய கருப்பு
கயிறு கூடஎன்
கூந்தல் முடியை பின்னி
அணிந்தது போல உள்ளதடா...!!!
காதோடு தொங்கும்
தொங்கட்டான் தோடும் அதுவும்
உன்னைப்பத்திதாண்டா பேசுது...!!!

மாலை வீட்டுக்கு
செல்லும் முன் கடிகார
முட்களை நோக்கிகொண்டே!
இருப்பதை விட
உனது கண்களையே!
அதிமாய் பார்ப்பதுண்டு...
பார்த்த்துண்டு....!!!

என் அலுவலகத்தில் வட்டமிடும்
காற்றாடி ரெக்கை
என் உச்சந்தலையில்
நீ தட்டுவது போலவே இருக்குடா!!

நீ காணாத பொழுது
என் கண்கள்
அறை அறையாய்
இதய வடிவில் நானே கண்டதுண்டு.....
என் மின்னல் பேச்சுக்கு
சொடக்கு போட்டு
கும்தலக்கடி
கும்மா
சும்மாவ சொன்னாங்க உங்க அம்மா
உன் கனரக காரியச்சிரிப்பில்....

வருகை பதிவேட்டில்
கையோப்பத்தை வைத்து
மேல் எழுதி பார்த்து
கிழிந்த்தது தெரியுமா?

என் மேல் விழி சொருகி
சிந்திக்கும் போது
இமை மடக்கி கவிதைய்யாய்
கழுத்தில் வார்த்தை தவம் கிடக்கும்
நெஞ்சை கடக்கும்
மனசு படபடக்கும்.....

மனசில முன்னாடி
முன்னாடி வந்து போகும்
கில்லாடி காதலண்டா....! நீ...

அலுவலக விடுமுறை என்றால்
முதலில் கோப்படுவது நானாகத்தான் இருக்கும்
உன்னை பார்க்க முடியாம போகுமே! என்று....

அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றாய்
என்றுடா என் இதயத்துக்குள்
அங்கும் இங்கும் நடப்ப

நீ சொன்ன ஒரு வார்த்தை
எனக்குள்
ஆயிரமாயிரம் தாமரை பூத்து கிடக்குது

இப்படிக்கு உன்னுடன்
பணிபுரியும் நேசகி...

Friday, August 7, 2009

கல்லூரிக்காதலன்

சுதந்திரப்பறவைப்போல
கல்லூரி வாசலை
நான் மிதித்தவுடன்
மனதில் பதித்த முதல் முகம்
உனது அன்பான அகம்....

மேஜை மீது வைத்த
புத்தகங்களெல்லாம்-உனது
பெயரையே உச்சரித்தது...

என்பருவ வயதில் கேலி
செய்த கண்களில்
கூடுதல் கவனம் செய்து கூலிகெட்ட்து என்னிடம்
உனது பார்வையடா!....

வறட்சியை தாங்கிய
இதயம்-சந்தோஷத்தில்
உனது நினைவுச்சலங்கையே
என் இதயத்தில் சங்கீதம் தட்டின....

மலர்சூடும் என் கூந்தலில்
நீயாகவே நான் கருதுகிறேன்
நான் குளிர்ச்சியாக இருக்க
உனது அன்பளிப்புடா..

ஐந்தாம் வகுப்பில்
கள்ளிச்செடியில் கள்ளத்தனமா
என் பெயரெழுதி அடி வாங்கினாய்
ஞாபகமிருக்காடா!....

அதே! ஆவலுடன் நானும்
உன் பெயரை மார்பகத்தின்
மேல் எழுதி வைத்து-தோழிகள்
கிண்டலடித்து மகிழ்ந்ததை
நினைத்து மகிழ்வேண்டா!

உன் ஒவ்வொரு கணமும் வகுப்பறையில்
கட் அடித்து கருவேலங்காட்டுக்குள்
போய் காதல் கடிதம் எழுதி பாஸானதாக கூறுவதை கேட்டேன்
மழை பொழிந்து முளையாத காளான் குடையாய்....

ராக்கிங் என்ற போதெல்லாம்
கிட்டாத என் மனது
சிட்டாக நீ இதயத்துக்குள் ஜாக்கிங்
பண்ணுறாயடா!....

சைட்டு அடித்துக் கொண்டு
சைக்கிள் ஓட்டி
மூதாட்டி மேல சாய்த்த நினைவுகளில்
என்ராஜாங்க கூட்டுக்குள்
ராஜ்ஜியம் தாங்குறாயேடா!!

இறுதி த்ற்வு எழுதி முடிக்கும்
இடி மழை கூட என்
கண்களின் உன் பிரிவை வெளிப்படுத்தியது....

என் நெஞ்சுக்குள்ளே!
உன்னை
நினைச்சேன்
என்னை மறந்தேன்
என் வீட்டில் வளர்த்த
கருவளையம் கண்ட கிளிக்கு
உன் பெயரிட்டு அழைப்பேன்டா!!!.....

மாறாக என்னை அழைக்கும்
உன் இதயக்கிளி
என் பெயரை செதுக்கும் உளி....!!!
என் கல்லூரியை
காதல் பல்கலைகழகமாக்கியது
உன்னுடன் பழகிய நாட்கள்!!!....

வடிந்த ஓலையில்
சொட்டு நீராய்....!!!

காதலன் வெப்சைட்

என்பேரழகுக்கு
பெரு உதவி செய்த
என்காதலனுக்கு
நான் தொடங்கிய வெப்சைட்டே!
காதலன் வெப்சைட்

நான் அடித்த சைட்டுகளுக்கு
அங்கீகாரம் கொடுத்த
என் காதலனுக்கு ஒரு முத்தம்....

ஒருமுறை கேட்டேன்
மனப்பூவை வாங்கித்தாவென்று
தந்தான் அவனின் மனப்பூவை...

நாட்டில் எத்துனையோ கவிஞர்கள்
காதலன் காதலியை பாடி இருப்பார்கள்...
முதன்முதலில்
காதலனைப்பாடும் காதலி காதலுடன்
கவிஞர்வாலிதாசன்…