Friday, August 7, 2009

கல்லூரிக்காதலன்

சுதந்திரப்பறவைப்போல
கல்லூரி வாசலை
நான் மிதித்தவுடன்
மனதில் பதித்த முதல் முகம்
உனது அன்பான அகம்....

மேஜை மீது வைத்த
புத்தகங்களெல்லாம்-உனது
பெயரையே உச்சரித்தது...

என்பருவ வயதில் கேலி
செய்த கண்களில்
கூடுதல் கவனம் செய்து கூலிகெட்ட்து என்னிடம்
உனது பார்வையடா!....

வறட்சியை தாங்கிய
இதயம்-சந்தோஷத்தில்
உனது நினைவுச்சலங்கையே
என் இதயத்தில் சங்கீதம் தட்டின....

மலர்சூடும் என் கூந்தலில்
நீயாகவே நான் கருதுகிறேன்
நான் குளிர்ச்சியாக இருக்க
உனது அன்பளிப்புடா..

ஐந்தாம் வகுப்பில்
கள்ளிச்செடியில் கள்ளத்தனமா
என் பெயரெழுதி அடி வாங்கினாய்
ஞாபகமிருக்காடா!....

அதே! ஆவலுடன் நானும்
உன் பெயரை மார்பகத்தின்
மேல் எழுதி வைத்து-தோழிகள்
கிண்டலடித்து மகிழ்ந்ததை
நினைத்து மகிழ்வேண்டா!

உன் ஒவ்வொரு கணமும் வகுப்பறையில்
கட் அடித்து கருவேலங்காட்டுக்குள்
போய் காதல் கடிதம் எழுதி பாஸானதாக கூறுவதை கேட்டேன்
மழை பொழிந்து முளையாத காளான் குடையாய்....

ராக்கிங் என்ற போதெல்லாம்
கிட்டாத என் மனது
சிட்டாக நீ இதயத்துக்குள் ஜாக்கிங்
பண்ணுறாயடா!....

சைட்டு அடித்துக் கொண்டு
சைக்கிள் ஓட்டி
மூதாட்டி மேல சாய்த்த நினைவுகளில்
என்ராஜாங்க கூட்டுக்குள்
ராஜ்ஜியம் தாங்குறாயேடா!!

இறுதி த்ற்வு எழுதி முடிக்கும்
இடி மழை கூட என்
கண்களின் உன் பிரிவை வெளிப்படுத்தியது....

என் நெஞ்சுக்குள்ளே!
உன்னை
நினைச்சேன்
என்னை மறந்தேன்
என் வீட்டில் வளர்த்த
கருவளையம் கண்ட கிளிக்கு
உன் பெயரிட்டு அழைப்பேன்டா!!!.....

மாறாக என்னை அழைக்கும்
உன் இதயக்கிளி
என் பெயரை செதுக்கும் உளி....!!!
என் கல்லூரியை
காதல் பல்கலைகழகமாக்கியது
உன்னுடன் பழகிய நாட்கள்!!!....

வடிந்த ஓலையில்
சொட்டு நீராய்....!!!

No comments:

Post a Comment