Tuesday, August 18, 2009

கனவுக்காதலன்...

இருட்டு உலகில்
நடந்து செல்லும்
எறும்பாய்....


நான் முகிலின் நகர்தலில்
எத்தனிப்பில் லகித்து
மொட்டை மாடிக்கொட்டகைக்குள்
போர்த்துக்கொண்டு
கதைபோடும்-
செவக்க செவக்க
வெத்தலைக்கார பாட்டியின்
பேச்சில் தூங்கியது தெரியாம
நடுராத்திரியில் –உசிப்பினாள்
எனது போர்வையை இழுத்து முத்தமிட்டான்
மழையாய்.....


எனது கனவை
கெடுத்த காதலன்....


அன்றைய இரவு
வெள்ளிகளும்
நிலாக்களையும்
எங்கும் காணோம்
கருத்த இரவில்
வருகை தரும் போது
வானிலிருந்து ஒரு
வெள்ளை வேஷ்டியில்
தொங்கி கொண்டு வருவதாய்
தெரிந்தது....

என் அகமும் ஆசையும் நனைந்து....

No comments:

Post a Comment